கும்பம்

கும்பம்

வேதத்தின் கண் ஜோதிடம்  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் பதினோராவது ராசி கும்பம்.தமிழ் மாதங்களில் மாசி மாதத்தை குறிக்கும் ராசி இது. இதன் அதிபதியும் ஆயுள்காரகன் என்ற அடைமொழியோடு இருக்கும் சனி பகவான் தான்,  பஞ்ச பூத தத்துவங்களில் காற்றைக் குறிக்கும் இந்த ராசி ஒரு ஆண் ராசி.

கும்ப லக்கினத்தில் பிறப்பவர்கள்  நேர்மையும், ஒழுக்கமும் உள்ளவர்கள், உயர் கல்வி பெற்றவர்கள், நற்குணங்கள் பெற்றவர்கள், எதையும் ஆராயும்  தன்மை கொண்டவர்கள்.   கும்ப ராசியை பொருத்தவரை  இயற்கையான விருப்பு வெறுப்பு கொண்டவர்கள்.  தமக்கு மிகவும் பிடித்தவரோடு மட்டும்தான் அதிக அன்பு வைப்பார்கள். அவர்கள் எதை சொன்னாலும் ஆமோதிப்பார்கள்.

பழைய சம்பிரதாயங்களில் நாட்டம் இருக்காது.  எதையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதால் நிர்வாக மேலாளர், தலைமை பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள்.  ஞாபக சக்தி இயற்கையாய் அமைந்திருக்கும்.
‘சாற்றினேன் கும்பத்தில் பிறந்தோன் ஞானி’ என்று புலிப்பாணி முனிவர் சொல்வது உண்மையாகும். என்னதான் குடும்பம், பாசம், பந்தம் என்று சுழன்றாலும் ஆன்மீக நாட்டமும், துறவற சிந்தனையும் இருந்து கொண்டே இருக்கும்.

உண்மைக்கு புறம்பாக நடப்பதில்லை என்பதால், அப்படி நடப்பவர்களை  கண்டால் அறவே பிடிக்காது. ஒதுங்கி விடுவார்கள்.  இவர்களுக்கு காதல் உணர்வு குறைவு. காதல் வந்து விட்டால் காதலித்தவரையே கைபிடிக்காமல் இருப்பதில்லை. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு  வாகன வசதி, வீடு, நிலம், போன்றவை அமைந்துவிடும். சுயமுயற்சியாலும், சுய சம்பாதியத்தினாலும் அமைத்து  கொள்வார்கள்.  இந்த ராசியில் பிறப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்றாலும் குறைவான எண்ணிக்கையில்தான்  இருக்கும்.

திருமண வாழ்க்கையில் சில கசப்புகள் இருக்கும். கணவன் மனைவிக்கும் இடையே ஒற்றுமை இருப்பது போல் தோன்றினாலும் உள்ளுர புகைச்சல் இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

9, 10, 11, 20, 30, 32 வயதுகளில்  நோய் , கண்டங்கள் வரும். இதிலிருந்து மீண்டால் 80 வயது வரை ஆயுள்.

இந்த ராசியில்  பிறந்தவர்கள் மாசி மாதத்தில் சுபகாரியங்ளைச்  செய்யாமல் தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு இது சூன்ய மாதமாகும்.

நல்ல நாட்கள் -:  புதன், வெள்ளி
ஆகாத நாள்  :  ஞாயிறு, திங்கள்
மத்திம நாள்  :  செவ்வாய்
ராசியான நிறம் -:  வெளிர் நீலம்,பச்சை, வெள்ளை
ஆகாத நிறம் : சிகப்பு
ரத்தின  கற்கள் : நீலக்கல், வைரம்
ராசியின்  நிறம் : கரு நீலம்
ராசியின்  : அவிட்டம் 3, 4
நட்சத்திரம்-   சதயம் –  1, 2, 3, 4 பூரட்டாதி 1, 2, 3

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop