மகரம்

மகரம்

வேதத்தின் கண் ஜோதிடம். அந்தக் கண் போன்ற ஜோதிடத்தின் பத்தாவது ராசி மகரம். தமிழ் மாதங்களில் தை மாதப் பிறப்பு மகரத்தில் தான் ஆரம்பமாகிறது. வண்ணத்தில்  நீலத்துக்கு உரியவர்.

கருப்பை உணர்த்துகிறவரும்  கூட. கர்மவினை கிரகம் என்று சொல்லப்படும்  சனி பகவானே இந்த ராசியின் அதிபதி. சனி சாஸ்திரத்தில் காளிதேவியின்  அம்சமாக சொல்லப்படுகிறது. இது ஒரு நீர் நிறைந்த நில தத்துவ ராசி மட்டுமல்ல பெண் ராசியும் கூட.  ஆயக்கலைகள் 64ம் அடக்கமான ராசி. இயல், இசை, நடனம், நாட்டியம் இந்த ராசிக்குள் அடக்கம். திசைகளில் தெற்கைக் குறிக்கும் ராசி.

மகர ராசியில் பிறப்பவர்கள் உதவும் குணம் கொண்ட உதாரண புருஷர்கள். நம்பியவருக்கு நண்பனாக இருக்கும் இவர்கள், நம்பாதவர்களுக்கு எமனாகவும் இருப்பார்கள்.  எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள். கற்றுணர்ந்ததை மற்றவர்களுக்கு போதிக்கும் ஆற்றலும் இருக்கும் லட்சிய வாதிகள், பிடித்ததை  விடாத பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்  வீண் பிடிவாதம் பிடிப்பதில்லை. பிறர் வெளியிடும் வீண் வார்த்தைகளையோ , அபிப்பிராயங்களையோ  கருத்தில் கொள்ளாமல் தம் இஷ்டப்படி நடக்கும்  குணம் கொண்டவர்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் அழுத்தம் திருத்தமாகவும், ஆணித்தரமாகவும் பேசும் குணமிருந்தாலும், கனிவான மனமும் இருக்கும். வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். தத்துவ சாஸ்திர பேச்சுக்களில்  சாமர்த்தியத்தை அதிகம் காட்டுவார்கள்.  எவ்வளவு  கவலைகள் ஏற்பட்டாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல்  மனதுக்குள்ளேயே அடக்கி வைக்கும் குணம் மிக்கவர்கள். மகர ராசியில் பிறந்தவர்களுக்கு   எதிர்காலம் சிறப்பாக அமையும்.

3, 4, 5, 7, 8, 10, 12, 32, 37 வயதுகளில் நோய் மற்றும் கண்டங்கள் வரலாம். இதைத் தாண்டினால் 67 வயது வரை ஆயுள் பலம் என்கிறது சாஸ்திரம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்குத் தை மாதம் சூன்ய மாதமாகும். எனவே தைமாதம் மட்டும் எந்த  நல்ல காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

நல்ல நாட்கள் : செவ்வாய்,  வெள்ளி

ஆகாத நாள்    : ஞாயிறு

மத்திம நாட்கள் : வியாழன், புதன்

ராசியான நிறங்கள்-  : வெளிர்நீலம், சிவப்பு,        வெள்ளை.

ஆகாத நிறங்கள் : ஆரஞ்சு, வயலட்

ரத்தினங்கள்- : நீலக்கல் , வைரம்

ராசியின் நிறம் : – நீலம்

ராசியின் உள்ள     :  உத்திராடம் 2, 3, 4

நட்சத்திரங்கள்  திருவோணம்  1. 2, 3, 4 அவிட்டம்  1, 2

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop