மிதுனம்

மிதுனம்

வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் மூன்றாவது ராசி மிதுனம். தமிழ் மாதங்களில்  ஆனி மாத துவக்கம் இந்த மிதுனராசியில்தான் ஆரம்பமாகிறது. இந்த ராசியின் அதிபதி வித்தைக்காரகன் என்று போற்றப்படுகிற புதன்  பகவான்.  மிதுன ராசியில் பிறந்தவர்கள் உயரமானவர்களாகவும், நடுத்தர சரீரம் உடையவர்களாகவும்.  மாநிறமும், ஒளி பொருந்திய கண்களும்,  பார்க்கும்போதே படித்தவர்கள் என்று சொல்லத்தக்க வகையிலும் இருப்பார்கள்.

மற்றவர்களை எடை போடுவதில் சமர்த்தர்கள்.  நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.  கற்றது குறைவாக இருந்தாலும்  அனுபவ ஞானிகளாக திகழவார்கள். அபார ஞாபக சக்தி மிக்கவர்கள். பின் வருவதை முன்னமே உணரும் கெட்டிக்காரர்கள்.   அதனால் எதையும் சமயோசிதமாக போசித்து அதற்கு தகுந்த மாதிரி வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வார்கள். புகழ்பெற்ற வியாபாரிகளை  உருவாக்குவது இந்த ராசிதான்.  உயர் அதிகாரிகளை  உருவாக்குவதும் இந்த ராசிதான். இது ஒரு வாயு  தத்துவ ராசி.  2, 3, 4, 5, 8, 9, 18, 25, 28 வயதுகளில் நெருப்பு, ஆயுதம், நோய் இவற்றால் பாதிப்புகள் வரும்.

மிதுனராசியில் பிறந்தவர்களுக்கு  ஆனி மாதம் சூன்ய மாதமாகும். அதனால் ஆனி மாதத்தில்  எந்த சுபக்காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

நல்ல நாட்கள் -: திங்கள், புதன், வியாழன், வெள்ளி
ஆகாத நாள் -: செவ்வாய்
மத்திம நாள் -: சனி
ராசியான நிறங்கள்-: மஞ்சள், வெள்ளை,  பச்சை, வெளிர்நீலம்
ஆகாத நிறங்கள் -: கருப்பு, சிகப்பு
ரத்தின கல் -: மரகதம்
ராசியின் நிறம் :- பச்சை
ராசியில்  உள்ள நட்சத்திரங்கள் -:  மிருகசீரிஷம்3, 4,  திருவாதிரை 1,2,3,4
புனர்பூசம் 1,2,3

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop