சிம்மம்

சிம்மம்

வேதத்தின் கண் ஜோதிடம். கண் போன்ற ஜோதிடத்தின் ஐந்தாம் ராசி சிம்மம். தமிழ் மாதங்களில்  ஆவணி மாத துவக்கம் இந்த ராசியில் தான்  ஆரம்பமாகிறது. இதன் அதிபதி சூரிய பகவான்.  பிதுர்காரகன் என்றும், ஆத்மக்காரகன் என்றும் போற்றப்படுகிறார்.

சூரியன்  ஜாதகத்தில் சிவனின் அம்சமாக போற்றப்படுகிறார். இது ஒரு ஆண்ராசி. நீர்நிலைகள் இல்லாத மலை காடு, வனாந்திரங்களை  குறிக்கும் ராசி இது. தோற்றத்தில் கம்பீரமானவர்கள். நடையில் மிடுக்கு, முகத்தில் கடுமை எல்லாமே, இவர்கள் வாய்திறக்கும் முன்பே ஆணை இடுவது போல் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள்வார்களே தவிர, அடங்கிப் போவதில்லை. இந்த ராசியில் பிறந்த பெண்கள் தன் கணவனை தனக்கு மிஞ்சி செயல்பட முடியாமல் வைத்துக் கொள்வார்கள். நிர்வாக திறமையும்,  சலிக்காத உழைப்பும் உள்ளவர்கள். நன்றி மறவாத  குணம் இருக்கும். அன்பு, பண்பு,
மரியாதை, தெய்வபக்தி நிறைந்தவர்கள்.

வலிய வம்புக்கு  போவதில்லை. வந்தால் அடக்காமல் விடுவதில்லை. மேற்பார்வை, நிர்வாக திறன் கொண்ட இவர்கள் அடிமை வேலை செய்ய விரும்புவது இல்லை. சுயேட்சை கொள்கை கொண்டவர்களாக இருந்தாலும் அடுத்தவர் அபிப்ராயங்களை கேட்கவும் செய்வார்கள். ஆனால் முடிவு மட்டும் இவர்களுடையது. பொதுவாக சிம்மராசியில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை சுகமாக

அமைவதில்லை. மனைவி அல்லது கணவன் ஒத்தக் கருத்துடையவர்கள் இல்லை. பெரும்பாலும் அரசு  ஊழியராகவும், தனியார் துறையானால் நிர்வாக மேலாளராகவும், சுயதொழில் செய்யும் முதலாளிகளாகவும் இருப்பார்கள். அந்தஸ்து, கௌரவம், பட்டம், படிப்பு, செல்வம், செல்வாக்கு பெற்றிருப்பார்கள். 5, 10, 27, 30 வயதுகளில் நோய் கண்டங்கள் வரலாம். இதை தாண்டினால்  80 வயது வரை வாழ்க்கை அமையும்.

சிம்ம ராசியில்  பிறந்தவர்களுக்கு ஆவணி மாதம் சூன்ய மாதமாகும்.  எந்த சுபகாரியங்களும் இந்த ஆவணி மாதத்தில்  செய்யக்கூடாது.

நல்ல  நாட்கள் -: செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு
ஆகாத  நாள் :- சனி
மத்திம  நாட்கள் :- திங்கள், வியாழன்
ஆகாத  தேதி :-  8, 17, 26
ராசியான நிறம் :- வெள்ளை,ரோஸ், இளஞ்சிவப்பு,
ஆகாத நிறம் :- கருப்பு
ரத்தின கற்கள் :- கனகபுஷ்பராகம், மாணிக்கம்
ராசியான  நிறம் :- சிவப்பு
ராசியில் உள்ள :- மகம் 1, 2, 3, 4
நட்சத்திரங்கள்  பூரம் 1, 2, 3, 4 உத்திரம் 1

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop