தனுசு

தனுசு

வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண் போன்ற ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். தனுசு ராசியின் அதிபதி பூரண சுபர் என்று வர்ணிக்கப்படுகிற குரு பகவான். இவர் சிவனின் அம்சமாக போற்றப்படுகிறார்.

பஞ்ச பூத தத்துவங்களில் நெருப்பு ராசி. இது ஒரு ஆண் தன்மை நிறைந்த ராசி. இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் கூட ஆண்களின் மனோபாவத்தையே அதிகம் பெற்றிருப்பார்கள். அதிகாரம், அடக்குமுறை எண்ணங்கள் அவர்களிடம் அதிகம் காணப்படும்.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் லாப நஷ்டக் கணக்கைத்தான் முதலில் பார்ப்பார்கள். படிப்பாளிகள் மட்டுமல்லாமல் அறிவாளிகளும் கூட. நாணயமானவர்கள், வாக்கு வன்மை மிக்கவர்கள். குறிக்கோளை எட்டுவதில் குறியாக இருப்பவர்கள். தத்துவம், வேதாந்தம், ஜோதிடம், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்கள். உரக்கப் பேசும் இவர்களது குரலில் அதிகாரமும், கட்டளை இடும் கண்டிப்பும் இருக்கும்.

சுறுசுறுப்பு மிக்கவர்கள். எதையும் எளிதில் கிரகிக்கும் தன்மைப்பெற்றவர்கள். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் விரும்பியதை பெறாமல் விடமாட்டார்கள். செய்வதை திருந்தச் செய்வார்கள். தன்னம்பிக்கையும், எதிர்கால நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் ஆற்றலும் பெற்றவர்கள். குற்றம் செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்கும் குணம் பெற்றவர்கள். அதனால் காவல் துறையில் இருந்தால் துப்பறிவதில் நிபுணர்களாக இருப்பார்கள்.

பெரும்பாலும் பெரிய குடும்பத்தில் பிறப்பு நிகழ்கிறது. சிறிய விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்துவார்கள். உடன் பிறந்தோர் அதிகம் இருந்தாலும் உதவிகள் கிடைக்காது என்கிறது சாஸ்திரம். அரசு ஊழியர்களாக, ஆசிரியராக, வக்கீலாக, பதிப்பாளராக, சுய தொழில் புரிபவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்க்கையும் அமைந்துவிடும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மார்கழி மாதம் சூன்ய மாதமாகும். எனவே மார்கழி மாதத்தில் எந்த சுபகாரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

2, 3, 7, 8, 12ம் வயதுகளில் நோய் பீடை, கண்டங்களும் வருமாம். இதைத் தாண்டினால் 80 வயது வரை பூரண ஆயுளோடு இருப்பார்கள்.

நல்ல நாட்கள் -: புதன்,  வியாழன், ஞாயிறு
ஆகாத நாட்கள் -: திங்கள், செவ்வாய்
மத்திம நாள் : சனி
ராசியான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், சந்தனக்கலர்
ஆகாத நிறங்கள் : சிவப்பு, கருப்பு
ரத்தின கற்கள் : கனகபுஷ்பராகம், மாணிக்கம்
ராசியின் நிறம் : -மஞ்சள்
ராசியில் உள்ள :  மூலம் 1, 2, 3, 4
நட்சத்திரங்கள் பூராடம் 1, 2, 3, 4  உத்திராடம் 1

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop